வெற்றியும் கிடையாது.. தோல்வியும் கிடையாது.. பெங்களூரு – நார்த் ஈஸ்ட் போட்டி சமனில் முடிந்தது

டாஸ் வென்ற நார்த் ஈஸ்ட் அணி இடது புறமிருந்து ஆட்டத்தைத் தொடங்கியது. பெங்களூரு அணியின் சுனில் ஷேத்ரியும் உதாந்தா சிங்கும் அற்புதமாக விளையாடினர். ஆனாலும் அவர்களை சமாளித்து நார்த் ஈஸ்ட் அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினர். பெங்களூரு அணி வீரர்கள் தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக விளையாடினர். ஆட்டத்தின் 27 ஆவது நிமிடத்தில் ரஃபேல் அடித்த பந்தை உதாந்தா சிங் கோலாக மாற்ற முயன்றார். ஆனால் அது மிஸ் கோலாக மாறியது.

இதையடுத்து 2 ஆவது பாதி ஆட்டம் தொடங்கியது. இந்த ஆட்டமும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இரு அணி வீரர்களும் போட்டி போட்டுக் கொண்டு விளையாடினர். ஆட்டத்தின் 66 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியின் ராய்க்கு மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது. 73 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. இதே போல் 81 மற்றும் 82 ஆவது நிமிடங்களில் பெங்களூரு மற்றும் நார்த் ஈஸ்ட் அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டன.

ஆட்டத்தின் 90 ஆவது நிமிடம் வரை இரு அணிகளுமே கோல் எதுவும் அடிக்கவில்லை. இதையடுத்து கூடுதலாக 4 நிமிடங்கள் வழங்கப்பட்டன. அந்த 4 நிமிடத்திலும் இரு அணிகளுமே கோல் எதுவும் போடவில்லை.