லண்டன்: இங்கிலாந்தில் லாரி கண்டெய்னரில் 39 பேரின் உடல்கள் கண்டுபிடிப்பட்டு இருப்பது அந்த நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. இது தொடர்பாக வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்த 25 வயது லாரி டிரைவரை பிடித்து துருவி துருவி விசாரணை நடத்தி வருகிறார்கள். இங்கிலாந்து நாட்டின் எசெக்ஸ் மாகாணத்தில் உள்ள கிரேஷ் நகரில் வாட்டர்கிளேட் தொழில்துறை பூங்காவில் அதிகாலை 1.40 மணிக்கு நின்று இருந்த ஒரு லாரி கண்டெய்ணரில் ஒரு இளைஞர் உள்பட 39 பேரின் உடல்கள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
எசெக்ஸ் போலீசார்
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள கொலை தொடர்பாக எசெக்ஸ் மாகாண போலீசார் சந்தேகத்தின் பேரில் வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்த 25 வயது லாரி டிரைவரை பிடித்து விசாரித்து வருகிறார்கள்
விசாரிக்கிறோம்
இது தொடர்பாக எசெக்ஸ் மாகாண காவல்துறை உயர் அதிகாரி ஆண்ட்ரூ மரைனர் கூறுகையில், "இது ஒரு சோகமான சம்பவம், ஏராளமான மக்கள் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர். என்ன நடந்தது என்பது குறித்து எங்கள் விசாரணைகள் நடந்து கொண்டிருக்கிறது. நாங்கள் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இருப்பினும் இதற்கு நீண்ட நேரம் ஆகும் என்று எதிர்பார்க்கிறேன்.