சியோமி நிறுவனம் இந்தியாவில் அதன் மி பேண்ட் 3i என்ற புதிய பிட்னஸ் பேண்டை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய மி பேண்ட் ஆனது AMOLED டச் டிஸ்பிளே, 5ATM வாட்டர்ப்ரூப் ரெசிஸ்டென்ஸ், 20 நாட்கள் வரை பேட்டரி ஆயுள், கால் மற்றும் நோட்டிஃப்பிகேஷன் அலெர்ட் மற்றும் வழக்கமான ஸ்டெப்ஸ் மற்றும் கலோரி கண்காணிப்பு போன்ற பிரதான அம்சங்களை கொண்டுள்ளது.
மி பேண்ட் 3ஐ என்பது கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட மி பேண்ட் 3 ஃபிட்னெஸ் பேண்டின் மேம்பட்ட பதிப்பு ஆகும். சுவாரசியமான விடயம் என்னவென்றால், மி பேண்ட் 3ஐ ஆனது மி பேண்ட் 3ஐ விடக் குறைவான விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது, இருப்பினும் மி பேண்ட் 3 ஐ ஃபிட்னஸ் பேண்ட் ஆனது இதய துடிப்பு கண்காணிக்கும் ஆதரவையும் கொண்டுள்ளது. மி ஸ்மார்ட் பேண்ட் 3i ஆனது ரூ.1,299 என்கிற இந்திய விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது. கருப்பு நிற வண்ணத்தில் மட்டுமே அறிமுகமாகியுள்ள இந்த மி பேண்ட் ஆனது Mi.com தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. அதாவது இது ஏற்கனவே விற்பனைக்கு வந்துவிட்டது என்று அர்த்தம். ஆர்டர் செய்ததும் 2 முதல் 4 நாட்களில் டெலிவரி செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.