மத்திய அணு சக்தி துறையின் கீழ் ஓர் அங்கமாக அணு எரிபொருள் வளாகம் (Nuclear Fuel Complex) செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் தற்போது தொழிற்பழகுநர் உள்ளிட்ட பயிற்சி பணிகளுக்காக விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ராஜஸ்தான் மற்றும் தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் அணு எரிபொருள் வளாகம் (Nuclear Fule Zirconium Complex) பணியமர்த்தப்படுவார்கள். இதில் சேருவதற்கு என்ன படித்திருக்க வேண்டும், எவ்விதமான பணிகள் உள்ளது என்பது பற்றிய விபரங்களை இங்கு காணலாம்.
1. தூத்துக்குடி அணு எரிபொருள் வளாகம்
தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் பழையகாயல் பகுதியில் Zircornium Complex இயங்கி வருகிறது. இதில் Stipendiary Trainee கிரேடு 1 பதவிக்கு மொத்தம் 6 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. டிப்ளமோ அளவிலான கெமிக்கல் பிரிவில் 5 காலியிடங்களும், டிகிரி அளவிலான கெமிக்கல் பிரிவில் 1 காலியிடமும் உள்ளது. டிப்ளமோ தகுதிக்கு கெமிக்கல் இன்ஜினியரிங் துறையில் டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். டிகிரி தகுதிக்கு B.Sc Chemistry படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.